Monday, November 7, 2011

நூல் வெளியீட்டுப் படங்கள்

என் கவிதைத் தொகுப்பு நூலான 'அன்பின் ஆறாமொழி' நூல் வெளியிட்டில் சில காட்சிகள்:











தினமணி நாளிதழில் வெளியான செய்தி படம் கீழே:




Thursday, November 3, 2011

நூல் வெளியீடு:படங்கள்

என் கவிதைத் தொகுப்பு 'அன்பின் ஆறாமொழி' நூல் வெளியீடு நேற்று நடந்தது.

பாலம் பதிப்பகத்தின் சார்பில் இந்த நூல் வெளியிடப்பட்டது.

கவிதைத் தொகுப்பை எழுத்தாளர் திரு.இந்திரா பார்த்தசாரதி வெளியிட்டார்.
எழுத்தாளர் திரு.ஜமாலன் நூலைப் பெற்றுக்கொண்டார்.
திரு.இந்திரா பார்த்தசாரதி, திரு.ஜமாலன், கல்கி இதழின் துணை ஆசிரியர் திரு. அமிர்தம் சூர்யா நூல் அறிமுகம் செய்தார்கள்.

திரு.அர்விந் அப்பாதுரையின் 'திரு-பூர்வீக-சதிர்' எனும் நாவலை எழுத்தாளர் திரு.எஸ்.ராமகிருஷ்ணன் வெளியிட்டார். கவிஞர் திருமதி.தமிழச்சி தங்கபாண்டியன் நூலை பெற்றுக் கொண்டார். எழுத்தாளர் திரு.எஸ்.ராமகிருஷ்ணனும் கவிஞர் திருமதி. தமிழச்சி தங்கபாண்டியனும் நூலை அறிமுகம் செய்தார்கள்.

இந்த விழாவுக்கு வந்து சிறப்பித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி!


Sunday, October 30, 2011

நூல் வெளியீட்டு விழா

பாலம் பதிப்பகம் சார்பில் நூல் வெளியீட்டு விழா
நவம்பர் 2ஆம் தேதி மாலை 6 மணிக்கு
ICSA புரோகிராம் வளாகம், ஜீவன் ஜோதி பில்டிங்,
107 பாந்தியன் சாலையில் நடைபெற இருக்கிறது.

அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்!

முபீன் சாதிகாவின் 'அன்பின் ஆறாமொழி' கவிதைத் தொகுப்பு
வெளியிடுபவர்: இந்திரா பார்த்தசாரதி பெறுபவர்: ஜமாலன்
நூல் அறிமுகம்: இந்திரா பார்த்தசாரதி, ஜமாலன், அமிர்தம் சூர்யா

அர்விந் அப்பாதுரையின் 'திரு-பூர்வீக-சதிர்' நாவல்
வெளியிடுபவர்: எஸ்.ராமகிருஷ்ணன் பெறுபவர்: தமிழச்சி தங்கபாண்டியன்
நூல் அறிமுகம்: பிரபஞ்சன், எஸ்.ராமகிருஷ்ணன், தமிழச்சி தங்கபாண்டியன்



Sunday, June 5, 2011

குமையும் மந்திரத்தில்

குரலிடும் படையில் கூற்றுவன் சொல்
கூவிக் கூறும் குற்றத்துப் பிடியில்

வண்ணம் வளையும்
வேர்முகிழ் இலையில்
மந்திரத் துகிலும்
மாந்தரின் அயிராய்
துளைத்த செங்குருதி
லச்சினையின் இருமை
புகலும் துதியில்

குரலிடும் படையில் கூற்றுவன் சொல்
கூவிக் கூறும் குற்றத்துப் பிடியில்

சதி மண்டும்
சித்திர விண்ணில்
மீள்புகா ஒருகண்
குமையும் கரத்து
சீவனே மண்ணுரைக்கும்
பீலி நெருடும்
பெறா புரவியின்

குரலிடும் படையில் கூற்றுவன் சொல்
கூவிக் கூறும் குற்றத்துப் பிடியில்

Monday, May 30, 2011

தீதும் தனை மறக்க

சீறும் வெகுளலாய்
கொடுஞ்சினத் தீயாய்
உருத்திரம் உக்கிரமாய்
உறுமும் கொடுவரி கானகத்து நீரிடை நிழல்கண்டு

உருவும் பொய்யாய்
வடிவும் வேறாய்
படியின் மாயமாய்
காணா பகை உறுத்து வந்த மருளின் நிலை ஓர்ந்து

கோண்மா தேடலாய்
உழை கிலியாய்
போத்து நடுங்கலாய்
இரைகொள் முனிவு உவகையோடு பொங்கி பாய்ந்தபற்று

விலகும் கானலாய்
மறையும் காட்சியாய்
மூழ்கும் தரவாய்
குறுக்கை குழம்பி கடுவன் குணத்தொத்து பதுங்கிநோக்கு

மேன்மை கணமாய்
யோகம் உடனாய்
வலியும் மலிவாய்
வயங்கும் வயமா நோகும் நலிவில் தீதும் தனைமறந்து