Monday, May 30, 2011

தீதும் தனை மறக்க

சீறும் வெகுளலாய்
கொடுஞ்சினத் தீயாய்
உருத்திரம் உக்கிரமாய்
உறுமும் கொடுவரி கானகத்து நீரிடை நிழல்கண்டு

உருவும் பொய்யாய்
வடிவும் வேறாய்
படியின் மாயமாய்
காணா பகை உறுத்து வந்த மருளின் நிலை ஓர்ந்து

கோண்மா தேடலாய்
உழை கிலியாய்
போத்து நடுங்கலாய்
இரைகொள் முனிவு உவகையோடு பொங்கி பாய்ந்தபற்று

விலகும் கானலாய்
மறையும் காட்சியாய்
மூழ்கும் தரவாய்
குறுக்கை குழம்பி கடுவன் குணத்தொத்து பதுங்கிநோக்கு

மேன்மை கணமாய்
யோகம் உடனாய்
வலியும் மலிவாய்
வயங்கும் வயமா நோகும் நலிவில் தீதும் தனைமறந்து