Sunday, November 20, 2011

ஒளிவிழி


நெளியும் புழுவும்
மட்கும் மதியும்
மருளும் கதியும்

காணா கண் உள்புகும் காண
பேணா ஊண் அவையமும் பேண

மேலும் கீழும்
புகலும் குழையும்
தாழும் திறனும்

கண்மேவ பொறியாகா உட்கண்
விண் பாய வினையாகா கொடுங்கண்

தினவும் வினவும்
விளையும் பிழையும்
களையும் கடையும்

இருகண் மங்கித் திரியும் மீகண்
ஒருகண் தாங்கி விரியும் வெங்கண்

அவிழும் கவிழும்
குலையும் கலையும்
அழலும் கழலும்

மறுகண் புரியா துதியில் படர்கண்
உருகண் மாறா சதியில் இடர்கண்

3 comments:

கணேஷ் said...

மனக்கண் செய்திடும் மாயம் கோஞ்சமோ... மிக ரசித்தேன்...

தென்காசித் தமிழ்ப் பைங்கிளி said...

அழகுத் தமிழ் உங்களிடம் கெஞ்சுகிறதோ கவி எழுதச் சொல்லி..

Mubeen Sadhika said...

நன்றி கணேஷ், தென்காசித் தமிழ்ப் பைங்கிளி