Sunday, February 19, 2012
பேய்கணம்
கூந்தலின் துளியில் வளியாடும்
கருவரி விரிந்து வெங்கண்காணும்
நாவும் செவ்வயின் கங்காய்த்துடிக்கும்
உருவும் பெருகி சதையும் முறுக்கி கனியும்
மீளியின் கூவலாய்த் தோன்றும்
சூளும் அருவாய் அமைந்து சுரக்கும்
வெருளும் அனலாய் விதந்து விடுக்கும்
நாளும் தோற்றவாய் மாறி ஒலியில் ஒடுக்கும்
இசைந்து உடன் நிற்கும்
புகைந்து திசைமாறத் தவிக்கும்
அணைந்து மணமாய் ஓர்மையும்
வலிந்து அதிரும் கொற்றமாய் பரவி பிடிக்கும்
நீலியும் பொங்கி பரிமளிக்கும்
அணங்கும் ஒறுத்து சிவந்து அழலும்
கொம்பனின் உருத்திரத்தில் கொடுஞ்சினமுறும்
பூதமும் நிழலாய் கூடி பதைக்கும் வெருவுறும்
கண்கொள்ளாக் காட்சியாய்
திண்மையும் செப்பும் வடிவாய்
தீதின் திறமறிந்து நோக்கும் சித்திரமாய்
புனையும் பொய்மையின் பெருங்கதையாய்
திருவும் திருகி தறித்து
பரமும் வேறாய் முளைத்து
மறையும் கானலாய் வளைந்து
முதலும் ஆதியாய் போக்குடன் கனிந்து
ஈற்றெடுக்கும் ஒரு பிளவில்
சேரா சக்தியாய் பகுத்து மோத
அச்சமும் அம்சமாய் அருநிறைகொண்டு
எட்டும் திறனும் எட்டா வலிவும் தீண்டுமோ
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
aaahaaa
Post a Comment