Monday, September 23, 2013

சமன்

பேரவா படைத்த பல்லண்ட புள்ளியில்
நீட்டலும் கோணலும் கொண்ட சமனை
தொட்டிடினும் விட்டிடினும் அகலாது
இடமென காட்டி மாயும் பிராயமும்
காலமென சுட்டி கரையும் பொழுதும்
இடையில் அசையும் அசையா சூத்திரம்
இணையும் தருணமதை முட்டியும்
வகிப்பின் கருத்ததனை நிரலாக்கி
புரியும் கோளில் நாட்டி அடைத்து
மேலாய் கீழாய் இடமாய் வலமாய்
திசையனைத்தும் வட்டமிட்டு பருபத்தும்
வினைபுரியும் மெய்யினை காணாது
அறிந்த அறிவதனை அறிந்தறிந்து
அறியா புதிரை அருவமாக்கி
நீரும் இல்லாது தீயும் கனலாது காற்றும் புகாது
மண்டலத்தின் இயக்கமென பகுத்து
பிறப்பும் இறப்பும் சலித்த ஆர்வத்து
வளியின் உருவாய் மின்னலின் ஒளியாய்
சேரும் ரூபமாய் விளங்கும் இசைவும்
விரியும் துணையும் புகையாய்
ஆதியின் சாத்திரத்தை மீறியும்
அந்தமில் காரணத்து எச்சமும்
மைபுக ஒன்றி மிளிரும் எல்லை
பரிமாண பதிலென தடையிடும் தொடர

3 comments:

komala said...

வணக்கம்.. நான் கோமளா.. உங்கள் வலைப்பதிவை பார்வையிட வந்தேன்.. ஆனால், கருப்பு பின்புலத்தில் வெள்ளை எழுத்துக்கள் உள்ளதால் படிக்க முடியவில்லை.. அசௌகர்யமாக இருக்கின்றது. இந்த நிலை பலருக்கும் ஏற்படலாம் என நினைக்கிறேன். அதை மாற்றி, வெள்ளை பின்புலத்தில் கருப்பு எழுத்துக்கள் என்றிருந்தால் வாசிக்க வசதியாக இருக்கும். நல்ல எழுத்துக்களுக்கு கூடுதல் அலங்காரம் அவசியமில்லை; அது தனக்கான அங்கீகாரத்தை தானே தேடிக்கொள்ளும் என்று நம்புகிறேன்.. உங்கள் இலக்கிய எழுத்துக்களுக்கும் இது பொருந்துகின்றது.. நான் சுட்டியுள்ள குறை, குறைதான் என உங்களுக்கும் தோன்றினால், கருப்பு-வெள்ளையை இடம் மாற்றுங்கள்.. அந்த தகவலை எனக்கும் கொஞ்சம் சொல்லுங்கள்.. நல்ல எழுத்துக்களை தவறவிடக்கூடாது என நினைக்கிறேன்..

நன்றி,
அன்புடன்

கோமளா கணேஷ்

Mubeen Sadhika said...

வணக்கம் கோமளா
உங்களை நான் முகப்புத்தகத்தில் பார்த்திருக்கிறேன்.

கருப்பு பின்புலத்தில் வெள்ளை எழுத்துகள் இருப்பது வாசிக்க சிரமம் என்பது போல் எனக்குத் தோன்றவில்லை. மேலும் என்னிடம் இதுவரை இது பற்றி யாரும் குறையாக சொல்லவும் இல்லை. இது போன்ற நிறம் இருப்பது இதில் ஓர் அலங்காரம் இருப்பதாக நினைக்கவில்லை. நிறங்கள் பற்றிய பார்வை சிந்தனைகள் குறித்து விளக்கமாகப் பேசலாம். இது போன்ற கருப்பு பின்னணி உள்ள ஒரு பதிவாக இது இருப்பது ஓர் நினைவை பார்வையாளர்களுக்குள் ஏற்படுத்துகிறது என்ற ஓர் எண்ணம் உள்ளது. மேலும் வெள்ளை நிறம் எல்லோரும் பயன்படுத்துவதுதான். அதில் ஒரு பதிவு என்பது எனக்குள் ஓர் உற்சாகத்தைத் தரவில்லை. வேறு ஏதாவது பின்னணியை புதிதாக போடவும் மனமில்லை. அதனால்தான் இப்படியே தொடங்கியதிலிருந்து வைத்திருக்கிறேன். சிரமத்திற்கு மன்னிக்கவும். உங்களின் முயற்சிக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

Mubeen Sadhika said...

நன்றி திண்டுக்கல் தனபாலன்.