உன்
ஒரு முகத்தின்
பாரா கணத்தில்
நிலைகொள்
இடும்பையோடு
பிரியும்
வளைவாய்
நெடுக
நீரின் நிறம்
என்
உரு அகத்தின்
புரியும் தருணத்தில்
அலையும்
களித்துயிலில்
சேரும்
பரப்பாய்
குறுக
குருதி வண்ணம்
நின்
சிறுபுறத்தின்
சிதறா காலத்தில்
கலையும்
உழந்து
கலப்புடன்
மையத்தில்
பொழியும் நிறமற்று
எம்
பெரு வெளியின்
குவிந்த பொழுதில்
இரங்கலில்
குழைவாய்
கிடையில்
விளிம்பில்
நாறி சாயமற்று
4 comments:
அருமையான வரிகள் சகோதரி...
புரியலைங்க...இதுதான் புதுக்கவிதை என்றால் பழைய செய்யுளே பரவாயில்லையே!
I have always liked most of your fusion poetry ... This one too
தி.சுதா, Nundhaa நன்றி.
துரைடேனியல் வாசித்ததற்கு நன்றி.
Post a Comment