சிறு பொறி
வினை பெரிது
பார்க்கும் கேட்கும் பகரும் நுகரும் ஊறும் உருகும்
உணர்வுப் புலன் மயம் இறுகிய சூத்திரம்
தொல்பொருள்
தொகுப்பின் சேமிப்பாய்
பார்த்தலில் கேட்டலும்
நுகர்தலில் ஊறுதலும்
பகர்தலில் உறைதலும்
எனவே சிறுத்து
துறை மாற்றுச் செய்யும் சிந்தையாய்
குறுகும் பரிணாமம் ஆற்றுவிக்க
மேலும் வளர்ந்த
புத்தறிவு சொடுக்கலில்
பல்லுயிர் காண்பதும் கூறுவதும் ஆன
எண்ணில் கொள்ளும் உணர்நிலை ஒற்றையாய்
ஒரு விசை
என பதிய
எந்திரச் சேவை அனைத்தும் இயக்கும்
விரல்நுனி ஓர் சொரூபத்தில் பொருந்தி
இனி எதுவும்
பிரித்தறியா கண்ணியில்
கோர்த்து படைக்கும் கரும்புகை மண்டலமும்
கொத்தாய் கூடும் விண்மீன் அண்டமும்
விரிந்த புலத்தில்
தனதென ஆக்கும்
கரணமில் சக்தியின் பலமும்
அடக்கிய வரிசூல் மெய்யின் பொருள்
2 comments:
அருமை... வாழ்த்துக்கள்...
நீங்களும் ரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப் போட்டியில் கலந்து கொள்ளலாமே...
விவரங்களுக்கு : http://dindiguldhanabalan.blogspot.com/2013/09/Rupan-Diwali-Special-Poetry-Contest.html
நன்றி...
உங்களின் ஆதரவுக்கும் நல்லெண்ணத்துக்கும் எனது நன்றிகள் திரு. திண்டுக்கல் தனபாலன். நான் இது போன்ற போட்டிகளில் பங்கெடுப்பதில்லை. தொடர்ந்து கவிதைகளைப் படித்து ஊக்கம் கொடுத்து வருவதற்கு மீண்டும் ஒரு முறை நன்றி.
Post a Comment