ஒன்றும் மற்றதுமாய் ஆதியில் நிலைகொள்ள
கண் மற்றும் ஓர் இணையாய்
செவி இரண்டென வகுத்து
உயிர் பிரிவதில் வேறாய்
வளியில் கலப்பினும் பற்றியது மற்றாய்
வாழ்தலினும் காணாது மாயத்தில்
சாதலினும் மறையாது காலத்தில்
விரவி பரவும் அடுத்த பரிமாணம்
உயிரற்றதாய் விலகிய பரிணாமம்
ஒற்றை மொழிதலில் சமனமடைந்து
கலைந்த பார்வையும் கரைந்த கேளலும்
வழிந்தது அரை முகம் கோணலுற்று
துடிப்பற்ற உடலும் குறுகி
என்பும் மறைந்து நரம்பும் முறிந்து
கல்லுமற்ற கனமுமற்ற புதுவடிவில்
ஞானம் கண்டது உணர்வின் குறிப்பை
அசைவற்ற சிந்தை அறிவது உட்பொருளை
புறமாய் இயங்கிய இருப்பின் கனிவை
ஈர்க்காது இறுகிய உக்கிர பருண்மை
4 comments:
என்னே வரிகள்...!
வாழ்த்துக்கள்...
நன்றி திண்டுக்கல் தனபாலன்.
வணக்கம்
சிறப்பாக உள்ளது கவிதை.. வாழ்த்துக்கள்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள்.....இந்த வருடத்தில் தங்கள் வாழ்வில் புது வசந்தங்கள் வீசட்டும்.....
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ரூபன். ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துகள்.
Post a Comment