வளைந்தன கோடுகள்
முனை உரசி சரிய
மேலும் உயர்ந்து சரிந்து
கீழும் வீழ்ந்து நுடங்கி
வட்டமோ ஆரமோ
வில்லும் அல்லாமல்
கொடியும் போலே
விழியும் நேராய்
நிமிர்ந்த செருக்காய் நாசியும்
சற்றும் குவிந்து
இரு பிறை நெளிவென
இதழ்களும் பிரிந்து
இறுகும் கன்னம் தழைய
அகலும் நுதலும்
அடர் கூந்தல் கலைய
ஆடியின் பிம்பமாய்
சுடர் பொலிந்த முகமும்
சித்திரத்தில் வேறாய்
மெய்யென மறைத்து
மற்றை யாதொரு
அகத்தில் துலங்கிடவே
4 comments:
முயங்கிய நிலையில் மயக்கமா..?! :)
அகத்தில் உள்ள ஒரு முகத்தை வரையும் ஓவியம் கவிதையாகி உள்ளது. அருமை. அந்த அகத்தில் உள்ள முகம் வழமையான சங்ககாலம் தொட்ட அழகியலை தாண்டாத ஒரு ஓவியப்பிம்பமாக இருப்பது என்பது அந்த அகம் பற்றிய ஒரு விமர்சன்மாக அல்லது தமிழ் அகத்தின் அழகியல் ஒழுங்குபற்றிய ஒரு விமர்சனமாக மாறியிருந்தால் கவிதை மற்றொரு தளத்தில் பரிமாணம் கொண்டிருக்கும். ஆனாலும் தமிழ் அகத்தின் அழகியல் என்பதில் உள்ள ஒழுங்கின் வன்முறை பற்றிய ஒரு அறிக்கையாக இக்கவிதையை வாசிக்கலாம் எதிர்மறையாக வாசித்தால்.
உங்கள் வாசிப்பு அபாரமானது. உற்சாகம் தரக்கூடியது நன்றி ஜமாலன்.
நன்றி சின்னப்பயல்.
Post a Comment