Monday, July 9, 2012
அல்லி அவிழும் அதரம்
பால் அன்ன முகமும்
பூ போல் விழியும்
இதழ் மடித்து சிலிர்க்கும்
மண் சமைந்து உடலானதோ
உயிராய் பயிர்த்து
கண் விரிந்தால் உதிரும் மலர்
இதழ் நனைந்தால் வீழும் மொட்டு
மழையும் பொழிந்து
விதிர்த்தது புஷ்பம்
மணலும் நீராய்
துளியில் பார்க்க
புனலில் மிதக்க
கடலில் கலக்க
ஆவியும் காற்றோடு
பனியில் ஜனித்து
கல்லாய் இமைக்கும்
அதரமும் மறுதளித்து மடலாய்
புதையும் உருமாறி
Monday, July 2, 2012
அமிழ்தாய்ச் சமைத்து
இதழ் காணும் இதழில்
சேரும் முள்ளின் சதையாய்
உடல் சாறில் கலக்க
புளிக்கும் நீரால் பிணைந்து
உவர்ப்பின் சதிரில் வாடி
தண்ணென்று தவழ்ந்து
சொரியும் பாலை
ஈர்த்துக் கொழுக்கும் அலகில்
தாழிட்டு மிழற்றி கூட
பாயும் கணம் மறைந்து
துவளும் மாயத்து
பொறிபோல் தொடர்ந்த
மதம் குணமாய் உவகையிட்டு
இதம் ருசியாய் அந்தியில்
உச்சத்தின் தேனாய் ஊற
அமிழ்தின் தினையதில் வகைப்பட
Sunday, June 24, 2012
அமிழ்து சமைக்கும்
உப்பின் கண்டம்
சேரும் மீனின் சதையும்
நெய் சோறும் கலக்க
புளி சாற்றில் பிசைந்து
வேம்பின் மலர் வாட
நீரில் உறைந்து
நொதிக்கும் பாலில்
கொழுந்தாய் மல்லித்
தாளிட்டு மிளகும் கூடி
பயிரின் கணம் கடைந்து
துவையல் மிக்கூற
பொறிக்கும் கறியும்
சுகம் மணமாய் அலைபாய
இனிக்கும் சுவை இறுதியில்
அமுதின் திறமதனை சாற்ற
ஆலின் ஊண் தொலை தெருள
Sunday, April 29, 2012
கூற்றம் முயங்கின்
கூற்றமில் பற்றின் புறத்தில்
வேருற்ற புறம் பற்றாய்
கூற்றம் பதரின் வேரில்
பதராய் பற்றும் ஒளிர
வேராய் ஒளிரும் பதர்
பற்று பதரும் ஒளியில்
கூற்றமாய் வேர் பதரில்
ஒளியும் புறத்தில் வேராய்
பற்றின் வேரில் கூற்றம்
பதர் ஒளிரும் கூற்றத்தில்
வேரின் பற்றும் ஒளியில்
புறம் ஒளிரா பற்றின்
கூற்றம் வேராய் பதரின்
வேர் புறமாய் கூற்றம்
ஒளியின் கூற்றமில் பதரும்
வேரற்ற பற்று புறத்தின்
ஒளிரும் கூற்றத்தின் வேர்
Sunday, April 22, 2012
சுயம் பெறு பருவம்
பரவும் நிலையாய் அகம்
சேரும் கணமாய் தன்னில்
மெய்மை காணும் புறமது
பொய்மை விழையும் சுயத்தில்
மற்றதும் பேசும் மீமிகவாய்
கற்றதும் கூறும் அந்தமாய்
ஆதியில் நிற்கும் குணமது
இயங்கிய விதியில் நோற்பது
நவிந்து கோடலில் மருவாய்
பெற்றிட மேவும் துஞ்சலில்
மற்றிட சாரும் வியந்து
கண்ணியில் கோர்த்து மகிழ
நுண்ணிய இழையில் துகிலாய்
நிறையுமோ குறையில் ஆட
குறையுமோ நிறையில் கூட
தாதியும் மறையும் கனவில்
தந்தையும் அறையும் நனவில்
மேலது மிகையாய் முதிரும்
கீழது நகையில் அடங்கும்
பெரும் பேறாய் சாறும்
பெறலே வேறாய் துவர்க்கும்
முழுதின் பக்கம் திரும்பும்
வதையின் சுகமாய் விரியும்
Sunday, April 1, 2012
வெங்கொடுங்கண்
கட்புலம் கவர்ந்து கண்நிழல் காவலில்
குறிப்பறியும் கோண்மா கொள்ளகம்
திரையிடும் திருஷ்டியும் உட்புக
இரை நிகர் பிடிக்கும் வெட்சியாய்
புறவின் நிழலில் புதைந்து வெருளும்
அதிரும் உழையும் நவ்வியும் துளைத்து
அய்யக்காட்சி புலனில் அறைந்த நோக்கில்
மாயமும் மைப்பாய் மறையும் சீவனம்
உதிரம் விழையும் புன்மையும் தீரா
இமையும் உறுத்தா பொறியாய் கணம்
மினுங்கும் விழியில் பொலிந்து அயர
குன்றிபோல் குழம்பும் எரியில் இட்ட
வேட்டுவன் வலையாய் ஈர்க்கும் செவ்வரி
புழையிடும் அம்பாய் தூர்ந்து சேரும்
குவியத்தின் மையத்தில் மெய்விழி படலம்
மேன்மையும் ஒத்து சாடையில் வீழும்
சிம்மத்தின் திறத்தில் கலந்துருமாறி
வேட்கை வடிக்கும் வெங்கொங்கண்
Sunday, March 4, 2012
கலவா பிறப்பில்
நான்காய் கால்கொண்டே
மென்பாதம் பொருத்தி
அடியும் நிறை காணா
நடைபழகும் ரகசியத்தில்
பூனையுட் புகுந்த அவளும்
புதுப்புனலறிந்து செறியும்
கரம் நீள கால் பாவும்
சிரம் எழ தோள் கடுக்கும்
குரல் மடுக்க நாபுரளும்
நிணம் சுவை கொடுக்கும்
தன்னில் பிரியா அகம் மறுக்கும்
சீராட்டும் உளமோடு
பிரிந்தும் கூடியும் இணையாய்
மரமேறி கீழ்பாயும்
ஆறறிவும் சுருங்கி உவளும்
குணமொத்து தானறியும்
இம்மையின் இரட்டை
மறுமையின் பன்மையாய்
சிறுத்து மடியும் ஊழின்
வினை வழிச் செல்லும்
போதம் அறியா பேடு
மோகம் தவித்து கடுவன்
தேடும் விழா நாளில்
இறுமாந்து துணைகொள்ள
நுகர்தல் போக்கி பற்றும்
விடுத்து யாசகம் செய்யும்
அறமகள் காண் அவ்விலங்கே
Subscribe to:
Posts (Atom)