குரலிடும் படையில் கூற்றுவன் சொல்
கூவிக் கூறும் குற்றத்துப் பிடியில்
வண்ணம் வளையும்
வேர்முகிழ் இலையில்
மந்திரத் துகிலும்
மாந்தரின் அயிராய்
துளைத்த செங்குருதி
லச்சினையின் இருமை
புகலும் துதியில்
குரலிடும் படையில் கூற்றுவன் சொல்
கூவிக் கூறும் குற்றத்துப் பிடியில்
சதி மண்டும்
சித்திர விண்ணில்
மீள்புகா ஒருகண்
குமையும் கரத்து
சீவனே மண்ணுரைக்கும்
பீலி நெருடும்
பெறா புரவியின்
குரலிடும் படையில் கூற்றுவன் சொல்
கூவிக் கூறும் குற்றத்துப் பிடியில்
7 comments:
வித்தியாசமான சிந்தனை...
//சதி மண்டும்
சித்திர விண்ணில்
மீள்புகா ஒருகண்
குமையும் கரத்து
சீவனே மண்ணுரைக்கும்
பீலி நெருடும்
பெறா புரவியின்
குரலிடும் படையில் கூற்றுவன் சொல்
கூவிக் கூறும் குற்றத்துப் பிடியில் //
நல்ல சிந்தனை, நல்ல கவிதை..
??????????????
வித்தியாசமான கவிதை
புரியும்படி எழுதுங்கள்...
நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.
#கவிதை வீதி #சௌந்தர், சங்கவி, யாதவன், ரத்னவேல் கவிதைப் படித்து கருத்தைச் சொன்னதற்கு நன்றி.
Post a Comment