குரலிடும் படையில் கூற்றுவன் சொல்
கூவிக் கூறும் குற்றத்துப் பிடியில்
வண்ணம் வளையும்
வேர்முகிழ் இலையில்
மந்திரத் துகிலும்
மாந்தரின் அயிராய்
துளைத்த செங்குருதி
லச்சினையின் இருமை
புகலும் துதியில்
குரலிடும் படையில் கூற்றுவன் சொல்
கூவிக் கூறும் குற்றத்துப் பிடியில்
சதி மண்டும்
சித்திர விண்ணில்
மீள்புகா ஒருகண்
குமையும் கரத்து
சீவனே மண்ணுரைக்கும்
பீலி நெருடும்
பெறா புரவியின்
குரலிடும் படையில் கூற்றுவன் சொல்
கூவிக் கூறும் குற்றத்துப் பிடியில்
Sunday, June 5, 2011
Monday, May 30, 2011
தீதும் தனை மறக்க
சீறும் வெகுளலாய்
கொடுஞ்சினத் தீயாய்
உருத்திரம் உக்கிரமாய்
உறுமும் கொடுவரி கானகத்து நீரிடை நிழல்கண்டு
உருவும் பொய்யாய்
வடிவும் வேறாய்
படியின் மாயமாய்
காணா பகை உறுத்து வந்த மருளின் நிலை ஓர்ந்து
கோண்மா தேடலாய்
உழை கிலியாய்
போத்து நடுங்கலாய்
இரைகொள் முனிவு உவகையோடு பொங்கி பாய்ந்தபற்று
விலகும் கானலாய்
மறையும் காட்சியாய்
மூழ்கும் தரவாய்
குறுக்கை குழம்பி கடுவன் குணத்தொத்து பதுங்கிநோக்கு
மேன்மை கணமாய்
யோகம் உடனாய்
வலியும் மலிவாய்
வயங்கும் வயமா நோகும் நலிவில் தீதும் தனைமறந்து
கொடுஞ்சினத் தீயாய்
உருத்திரம் உக்கிரமாய்
உறுமும் கொடுவரி கானகத்து நீரிடை நிழல்கண்டு
உருவும் பொய்யாய்
வடிவும் வேறாய்
படியின் மாயமாய்
காணா பகை உறுத்து வந்த மருளின் நிலை ஓர்ந்து
கோண்மா தேடலாய்
உழை கிலியாய்
போத்து நடுங்கலாய்
இரைகொள் முனிவு உவகையோடு பொங்கி பாய்ந்தபற்று
விலகும் கானலாய்
மறையும் காட்சியாய்
மூழ்கும் தரவாய்
குறுக்கை குழம்பி கடுவன் குணத்தொத்து பதுங்கிநோக்கு
மேன்மை கணமாய்
யோகம் உடனாய்
வலியும் மலிவாய்
வயங்கும் வயமா நோகும் நலிவில் தீதும் தனைமறந்து
Monday, June 21, 2010
நுவல்-------------மொழி
அழுங்கும்----------------------------------வலிக்கும்
உயவலில்---------------------------------துன்பத்தில்
உழந்த----------------------------------------வருந்த
புலக்கும்------------------------------------பிணக்கடையும்
யாதனையோ----------------------------வேதனையோ
கழுவாய்------------------------------------தீர்வாய்
அழற்றும்-----------------------------------எரிக்கும்
ககனமோ-----------------------------------சுவர்க்கமோ
தெள்ளிதில்-------------------------------தெளிந்ததில்
மாயும்---------------------------------------மறையும்
வாமத்தின் கருங்காய்--------------ஒளியின் இருளாய்
மறையும் நுகைவும்-----------------வலிமையும் மென்மையும்
சழக்கு கூடி நற்று விலகி----------தீமை கூடி நன்மை விலகி
வழாஅல் சால்பின் புலையோடு
மறத்தினதாய் விதனத்தில்-------வழுக்குதல் ஒழுக்கத்தின் இழிவோடு தீமையினதாய் துயரில்
ஆவும்-----------------------------------------விரும்பும்
ஆ------------------------------------------------ஆன்மா.
Monday, September 21, 2009
Subscribe to:
Posts (Atom)