Sunday, February 24, 2013

விழியின் விழி


பனிசூழும் காற்று குத்தும் குளிராய்
மெல்லிதழ் வருடி வாட
விழி கொள் பார்வை
புலன் கடிந்து நுடங்க
இசை முகிழும் அகம்
தனிப்பெரும் தகிப்பின் வாசமாய்
புலவும் நிலை கூறி
புறம் நிற்கும் கழிப்பாய்
தறிகெட்ட விசையென அறிவின் இயல்பாய்
இருள் உலகும் நகைத்து
ஒளி புகா படலத்தில்
ஊர்ந்து பாய
செவியும் ஈருணர்
வகை போல் தகவுகொண்டு
தொட்டும் நுகர்ந்தும்
வடிவமாய் வரைய
வண்ணங்களற்று உவர்ப்பின் சுவையாய்
கதிர் வீசும் கனத்துடன்
யாவரும் நிறையும்
கலன் அன்ன சிரத்தை
தாங்கி தானாய் ஏந்தி
நீர் நிறை ஞாலத்தில்
படரவும் விட்டு புகலும் கூற்றாய்
சேருமோ கண் எனும் பிணி

2 comments:

நந்தாகுமாரன் said...

மரபு மொழி நடையை நவீனதிற்குள் கொணர்ந்து நவீனதை உடைக்கும் பின்மரபுத்துவம் ... எனக்குப் பிடித்திருக்கிறது ...

Mubeen Sadhika said...

நன்றி NKR R.