Monday, August 25, 2014

வீணில் உடல்

தோயும் உடல்
தனித்தென பிரிய
ஆர்ப்பரிக்கும் சுழிப்பு
சுற்றும் வட்டமாய்
நீரும் குருதியும் கலந்து
நீர்த்தலாய் வழிய
ஓர்மையும் சரிதமும்
பிணங்கிக் கூட
பிளவுற்ற புலன்
நிரக்கமாய் சமைய
இடையில் ஊடாடும்
மூதின் பருவம் என
கடக்க மறுத்து
துடிப்பில் சில்லென்
சிலிர்ப்பும் வடிந்து
பெயர்த்துச் சிதறிய
இரு கூறென கண்டு
கவின் கரைந்து
இளகும் நிணமென
பிம்பமும் பொலிய
நகைப்பின் சித்திரமாய்
கோரச் செண்டும்
இதழ் பிய்ந்து குதற
ஞானம் செப்பும் சிமிழாய்
துலங்கும் வீணில்

1 comment:

ஜெயபாலன் said...


வீணில் தேயும் உடலல்ல முபீன். சந்தணக் கட்டையாய் தேயும் உடல் கம கமவென வாழ்வாக நறுமனம் வீசுமே/ வ.ஐ.ச.ஜெயபாலன்