
Tuesday, December 29, 2015
இயல் நிலை
எம்மனதின் ஊஞ்சல் கயிறு பிணைத்திழுத்த சகோரத்தின் கழுத்தில் தடம் பதித்த உருவாய் வலியும் தீரா திக்கில் உதிரும் செண்டின் தோற்றவாய் காணா கிடைத்தொழுக்கம் திரண்ட பதியமதில் முழ்கும் முளைவிடா யோகத்தருணமது உம்மை கொணரும் நுண் புள்ளி வீழுமோ அக்குளத்தின் அங்கணச் சேற்றில் ஆதிவிடம் கரைநிறை முயக்கும் கள்ளோடு தேமதுரச் சாறும் தூது செல்லா வளியின் பின்னே விரைந்தோடும் சக்கரத்து தேர்க்காலில் இட்ட பலாச்சுளை மிஞ்சா தீரத்தில் எம்மை என்புறுவாய் ஆக்கிட்ட இச்சை சொடுக்கும் கணத்தில் தேயும் ஆறலை மெய்யும் வருந்தா தினவோடு உம்மில் அமிழும் கரைசலில் விலகுமோ கோர்வை கொள் உப்புநீர் சொறியும் விழிகோளத்து சேர்வையில் தொலையும் நிழல் விதிரும் இதழ் சேரா மருட்கை அலையும் எமது அவயமறு ஆதாரத்தின் சின்னமாய் சிக்கி கசியா உமது கருங்கல் ஞாலத்தில் பிரியுமோ உளமெனும் சாறும் உயிரெனும் கூடும்.
Subscribe to:
Post Comments (Atom)
11 comments:
சர்ர் அந்த பேஜ் செட் அப் கொஞ்சம் கவனிங்க
புரியவில்லை.
யம்மாடி, கவிதை வெயிட்டாத் தெரியுது.
மீண்டும் படித்து புரிந்து கொள்ள முயல்கிறேன்.
நன்றி
உறவே எனக்கு பகையானது போல்,
தமிழையே அந்நிய மொழியக்கி
விளக்கவுரை கேட்க வைத்துவிட்டீர்கள்
உறவே எனக்கு பகையானது போல்,
தமிழையே அந்நிய மொழியக்கி
விளக்கவுரை கேட்க வைத்துவிட்டீர்கள்
வார்த்தைகள் தெரிகிறது,
வரிகள் தான் புரிய ????
உங்கள் மறுமொழிக்கு நன்றி. வார்த்தைகள் புரிந்தால் பொருளும் புரியும். ஒவ்வொரு கணத்திலும் ஒரு பொருள் கொடுப்பதும் கவிதையின் ஓர் இயல்பு தானே? உங்கள் முயற்சிக்கு நன்றி.
புரிகிறது என்று பொய்சொல்ல தெரியவில்லை..
புரியவில்லை என்று சொன்னாலும் நீங்கள் சொல்லவதாய் இல்லை ...
சரி தானே ....
எப்படியோ என் தமிழ் இன்னும் வாழ்கிறது .. உங்களை போன்றவர்களால்
சுதாகர் குமார் அவர்களே,
புரிந்தே ஆகவேண்டும் என்கிற கட்டாயம் எதுவும் இல்லை. உங்களுக்குப் புரிந்தது தவறு என்பதும் இல்லை. மொழி, சிந்தனை, அனுபவம், படிப்பு எல்லாம் சேர்ந்து இந்த வகையில் வெளிப்பட்டிருக்கிறது. இதில் எதற்கு வருத்தம்?
neengal ezhuthuvathu ungalukkaga mattumea.
Santhilal அவர்களுக்கு,
எனக்காவும் எழுதுகிறேன்.
மிக்க நன்றி.
Post a Comment