Monday, May 30, 2011

தீதும் தனை மறக்க

சீறும் வெகுளலாய்
கொடுஞ்சினத் தீயாய்
உருத்திரம் உக்கிரமாய்
உறுமும் கொடுவரி கானகத்து நீரிடை நிழல்கண்டு

உருவும் பொய்யாய்
வடிவும் வேறாய்
படியின் மாயமாய்
காணா பகை உறுத்து வந்த மருளின் நிலை ஓர்ந்து

கோண்மா தேடலாய்
உழை கிலியாய்
போத்து நடுங்கலாய்
இரைகொள் முனிவு உவகையோடு பொங்கி பாய்ந்தபற்று

விலகும் கானலாய்
மறையும் காட்சியாய்
மூழ்கும் தரவாய்
குறுக்கை குழம்பி கடுவன் குணத்தொத்து பதுங்கிநோக்கு

மேன்மை கணமாய்
யோகம் உடனாய்
வலியும் மலிவாய்
வயங்கும் வயமா நோகும் நலிவில் தீதும் தனைமறந்து

12 comments:

கவி அழகன் said...

அருமையாய் இருக்கிறது

கவி அழகன் said...

அருமையான தமிழ் மொழி கவிதையில் தவழ்கிறது

கவி அழகன் said...

இப்படிப்பட்ட தரமான கவிதைகள் என் பார்வைக்கு படாமல் போனது எனக்கு கவலை தருகிறது

சொல்கேளான் ஏ.வி.கிரி said...

இலக்கியவாதிகளக்கு மட்டும் கவிதை எழுத வேண்டாம் மேடம்...எளியவர்களுக்கும் எளிய வார்த்தைகளில் எழுதுங்கள்...

சொல்கேளான் ஏ.வி.கிரி
solkelanavgiri.blogspot.com

சின்னப்பயல் said...

உறுமும் கொடுவரி - புலி
மருளின் நிலை ஓர்ந்து - மான்
இரைகொள் முனிவு - ?!
கடுவன் குணத்தொத்து - பூனை
வயங்கும் வயமா நோகும் நலிவில் தீதும் தனைமறந்து ,,,!

Mubeen Sadhika said...

நன்றி யாதவன், தமிழ் புலவர்.

Mubeen Sadhika said...

சின்னப்பயல்
உங்கள் வாசிப்புக்கு நன்றி.

Ungalranga said...

:)

புரியாமைக்கு என் அறியாமையே காரணம்..

amma said...

கவிதைமிகஅருமை தோழி

பிரபாஷ்கரன் said...

/உருவும் பொய்யாய்
வடிவும் வேறாய்
படியின் மாயமாய்
காணா பகை உறுத்து வந்த மருளின் நிலை ஓர்ந்து/
/
அருமை வரிகள்

Mubeen Sadhika said...

ரங்கன் எல்லாமே புரிந்துவிடுவதில்லை. நன்றி

Mubeen Sadhika said...

பிரபாஷ்கரன், amma வாசிப்பிற்கு நன்றி.