Sunday, April 1, 2012

வெங்கொடுங்கண்


கட்புலம் கவர்ந்து கண்நிழல் காவலில்
குறிப்பறியும் கோண்மா கொள்ளகம்
திரையிடும் திருஷ்டியும் உட்புக
இரை நிகர் பிடிக்கும் வெட்சியாய்
புறவின் நிழலில் புதைந்து வெருளும்
அதிரும் உழையும் நவ்வியும் துளைத்து
அய்யக்காட்சி புலனில் அறைந்த நோக்கில்
மாயமும் மைப்பாய் மறையும் சீவனம்
உதிரம் விழையும் புன்மையும் தீரா
இமையும் உறுத்தா பொறியாய் கணம்
மினுங்கும் விழியில் பொலிந்து அயர
குன்றிபோல் குழம்பும் எரியில் இட்ட
வேட்டுவன் வலையாய் ஈர்க்கும் செவ்வரி
புழையிடும் அம்பாய் தூர்ந்து சேரும்
குவியத்தின் மையத்தில் மெய்விழி படலம்
மேன்மையும் ஒத்து சாடையில் வீழும்
சிம்மத்தின் திறத்தில் கலந்துருமாறி
வேட்கை வடிக்கும் வெங்கொங்கண்

No comments: