Sunday, April 22, 2012

சுயம் பெறு பருவம்


பரவும் நிலையாய் அகம்
சேரும் கணமாய் தன்னில்
மெய்மை காணும் புறமது
பொய்மை விழையும் சுயத்தில்
மற்றதும் பேசும் மீமிகவாய்
கற்றதும் கூறும் அந்தமாய்
ஆதியில் நிற்கும் குணமது
இயங்கிய விதியில் நோற்பது
நவிந்து கோடலில் மருவாய்
பெற்றிட மேவும் துஞ்சலில்
மற்றிட சாரும் வியந்து
கண்ணியில் கோர்த்து மகிழ
நுண்ணிய இழையில் துகிலாய்
நிறையுமோ குறையில் ஆட
குறையுமோ நிறையில் கூட
தாதியும் மறையும் கனவில்
தந்தையும் அறையும் நனவில்
மேலது மிகையாய் முதிரும்
கீழது நகையில் அடங்கும்
பெரும் பேறாய் சாறும்
பெறலே வேறாய் துவர்க்கும்
முழுதின் பக்கம் திரும்பும்
வதையின் சுகமாய் விரியும்

No comments: