Sunday, August 12, 2012

விடம் கண்டு


வண்ணத்தி பறந்து படபடத்து சுற்றும் எம்மை.
இன்பமும் துன்பமும் கண்டு நிறம் மறைந்து கூடுமது.
எம்மில் நுடங்கும் எம்மில் துவளும். எம்மில் மீளும். கனவிலும் நிறைக்கும்.
அன்றும் ஓர் இரவில் விடம் கொண்ட சிறுபறவையாய் இனம் மாறி எம்மை தீண்ட.
கொடும் வலி கூடும் நாளில் கொல்லும் திறமறிந்தும் கொய்யா உயிரை பேணும் யாம்.
குலம் பெருக்கி கோட்டையில் துலங்கும் அது.
நஞ்சின் கடுமை வாட்ட இன்னல் தாக்க குலைவோம் யாம்.
சிற்றுயிரில் சிறுத்து தன் ஆலின் பெருமை கூவி கிளரும் அது.
எம்முன் நேசம் காட்டி தன்னலம் நாடி ஏமப்பு கொள்ளும்.
பிணி பொறுத்து பிழை பொறுத்து வதை பல கண்டு வாட்டமுற்று சாத்துயருற்றும் உயிர் போக்கும் மந்திரம் தானறியோம் யாம்.
எம்மை பிளந்து பெரும் யோகம் திறம் காண விருப்புறும் அது.
இழி பிறப்பு தனை வியந்து போற்றும் நகை கொண்டோம்.
சுருக்கி உடையும் உள்ளமதை தேரும் வழி கண்டோம்.
திருவின் நிறையில் பொலிவிக்க திருவுளம் பெற்றே.

2 comments:

Unknown said...

அழகிய தமிழில் அழகுபட எழுதியுள்ளிர்கள் தோழி... அருமை

என்னுடைய வலைபதிவில் "பாதை மாறும் பயணம்" கட்டுரை படித்து கருத்து தெரிவிக்க உங்களை வரவேற்கிறேன்...

Mubeen Sadhika said...

நன்றி Ayesha Farook