Sunday, July 22, 2012

அவள்-அவன்-அவை


அவள்
கோள் மாறி கோள் நிலைத்து
பாரில் துயருற்று புறஞ்சேரும்
நேசம் எனும் பேரச்சம்
புகல்ந்த பிரிவதனை தேறா
புலனுணர் வினை தவறி
இருத்தும் கொடுமையில்
விடுபடா மோனம் விண்
சேர்ந்து முட்டும் மீனை
ஈர்க்கும் ஒளிக்கணமாய்
இன்னும் மரிக்கும் காலத்தில்
நிகழ்வதோ உடம்போடு
பெயர்ந்த விருப்பின் நிலை

அவன்
முரசும் கொட்டி எல்லை
பெருக்கும் ஞாலம் தனை
கட்டி கையில் கொணரும்
புஜபலம் மீட்டு புதிர்
பாவும் பகை பொருது
மலை கடல் கடந்து
பொங்கும் வாகையை
அணியிழை பாதம்
கொட்டி வேட்கையில்
தனி நீராடி தாங்கொணா
உற்றும் உறவும் பெற்று
நிற்பதோ நெடுவெண் கொற்றம்

அவை
உயிரும் துலக்கமுற்று
புல்லும் புள்ளும் மாவும்
ஆவும் ஓர் நிறையாய்
நிலம் தேர்ந்து நிற்க
வளியில் கலக்கும்
பொருளிலா நுவல்தல்
தனையதை மந்திரத்தில்
மிகையிட்டு மெய்மிக
வுண்டாம் இடைக்கோட்டு
செயலதில் இகம்
எனும் பரம் கண்விதுப்
பழிந்து நெறியெனதானதே

5 comments:

sathishsangkavi.blogspot.com said...

//அவை
உயிரும் துலக்கமுற்று
புல்லும் புள்ளும் மாவும்
ஆவும் ஓர் நிறையாய்
நிலம் தேர்ந்து நிற்க
வளியில் கலக்கும்//

கலக்கல் வரிகள்...

Mubeen Sadhika said...

நன்றி சங்கவி

பூங்குழலி said...

கொட்டி வேட்கையில்
தனி நீராடி தாங்கொணா
உற்றும் உறவும் பெற்று
நிற்பதோ நெடுவெண் கொற்றம்


படிப்பதற்கு அத்தனை அழகு கவிதை .சந்தம் மிக அழகு ..சொல்லாடலும்

Mubeen Sadhika said...

நன்றி பூங்குழலி

சிவாஜி said...

அர்த்தம் எதுவும் பெரிசா பிடிபடற மாதிரி தெரில. ஆனா என்னவோ பண்ணுது எப்படி?